திருச்சி, மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப் பட இருப்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குருவாயூரில் இருந்து நாளை (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16128) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந் தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக வராது. அதேபோல, செங்கோட்டையில் இருந்து வருகிற 13-ந்தேதி காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16848) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவ கோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக வராது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service-2




