துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன இலங்கை - வங்காளதேசம் இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-sri-lanka-bowling-decision-vs-bangladesh




