சென்னை, சமூக நீதித்துறை சார்பாக ஆதிதிராவிட நல இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 24x7 கட்டுப்பாட்டு அறையை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார். உடனடி தீர்வு இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சமூகநீதி விடுதிகளில் குறைதீர்வை வலுப்படுத்தி, குறைகளை நேரடியாகவும் உடனடியாகவும் நிவர்த்தி செய்வதற்காக ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் திறந்து வைத்தார். சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்கள் உணவு தொடர்பான புகார்கள் மற்றும் பிற குறைகளை பதிவு செய்து உடனடி தீர்வு பெற இது உதவும். கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் கட்டுப்பாட்டு அறை மூலம் மாணாக்கர்கள் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (+91 73388 01456), எக்ஸ் (முன்பு ட்விட்டர்) - (@ADWDtamilnadu) வழியாக தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை பதிவு செய்யலாம். நிவர்த்தி செய்யப்படும் பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக தொடர்புடைய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணாக்கர்களின் குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். தினமும் ஆய்வு கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்து மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்கள் மாணாக்கர்களுடன் நேரடியாக உரையாடி, அடிப்படை வசதிகள் மற்றும் நலன் குறித்து கேட்டறிந்தார். பெறப்பட்ட மற்றும் நிவர்த்தி செய்யப்பட்ட குறைகள் குறித்து இயக்குநர் தினமும் ஆய்வு செய்வார். வாரந்தோறும் அறிக்கை சமூக நீதித்துறை அமைச்சர் மற்றும் சமூக நீதித்துறை செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படும். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் என்.சுப்பையன், ஆதிதிராவிடர் நல இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கி.செந்தில்ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் ச.அண்ணாதுரை மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/control-room-to-address-grievances-of-government-hostel-students-opened-by-minister-vanni-arasu




