முக்கிய நிர்வாகி கைது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் அசுதோஷ் ரங்கா. அவர் நேற்றுமுன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தி வந் தார். நேற்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்து தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த கூட்டத்தை நடத்த போலீ சார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டத்துக்கு செல்லவிருந்த அசுதோஷ் ரங்காவை போலீசார் தடுத்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். அவருடன் சில ஆதரவாளர் களும் அழைத்து கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட தாக தெரிகிறது.இதுகுறித்து கரப்பானபூச்சி ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: “எங்கள் அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கின்றனர். அசுதோஷ் ரங்கா வும், கட்சியினரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரங்காவும், அவரது குழுவினரும் அசாமில் தன்னார்வலர்களின் சந்திப்பு ஒன்றை நடத்தவிருந்தனர்" என்று கூறினார். முதல்-மந்திரி மீது குற்றச்சாட்டு இதற்கிடையே, அசுதோஷ் ரங்காவின் எக்ஸ் பக்கத்தில் வெளியான வீடி யோவில், போலீசாருடன் வாகனத்தில் அவர் அழைத்துச் செல்லப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. 'அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தன்னை தடுப்புக்காவலில் வைத்திருப்பதாக' ரங்கா குற்றம்சாட்டினார். 'அசாமில் பள்ளிகளின் நிலவரத்தை வெளிப்படுத்துவோம் என்பதால் அவர் கள் அஞ்சுவதாக" கூறி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/key-office-bearer-of-the-cockroach-janata-party-arrested-abhijit-dipkes-allegation




