சென்னை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “இன்று (02.09.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரெயில்வே சார்பில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு ரெயில்வே பகுதிகளில் தூர் வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் கணேசபுரத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் உள்ளிட்ட ரெயில்வே பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம், தென்னக கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ஆங்குர் சவுகான், முதுநிலை கோட்டப் பொறியாளர் (ஒருங்கிணைப்பு) நந்தகோபால், மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள் பி.சங்கரவேலு, பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-railway-areas-review-meeting-chaired-by-chennai-corporation-commissioner




