லண்டன் தி ஹண்ட்ரட் ஆண்கள் தொடரின் இறுதிப்போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் என்பது இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100-பந்து போட்டியாகும். இதில் 8 அணிகள் பங்கேற்கும். இந்த தொடரின் 6-வது சீசன் தற்போது நடைபெற்றது. இதில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் ஆண்கள் தொடரின் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் - டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய டிரெண்ட் ராக்கெட்ஸ் 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 72 ரன்கள் விளாசிய டிம் சீபர்ட் இதையடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்க வீரர் டிம் சீபர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். பால் வால்டர் 22 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர். 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி தொடர்ந்து லீவிஸ் டு ப்ளாய் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 98 பந்துகளில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தி ஹண்ட்ரட் ஆண்கள் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/manchester-super-giants-won-by-5-wkts




