மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசும்போது, 'ஜென்-சி' தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் தேச விரோதிகள் அல்ல. அவர்கள் நம் சொந்த மக்கள். நம் அடுத்த தலைமுறையினர். அவர்களுடன் பேச்சுவார்த்தையும் தேவை. எது நடந்திருந்தாலும் 'ஜென்-சி' தலைமுறையினரின் கோரிக்கை நியாயமானது. இந்திய கல்வி முறையில் இன்னும் அதிக சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. போராட்டம் என்பதும் ஒரு வகையான உரையாடல்தான் என கூறி இருந்தார். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:- 'ஜென்-சி' இளைஞர்களுக்கு மோகன் பகவத்திடமிருந்து சான்றிதழ் தேவையில்லை. நாடாளுமன்ற கூட்டத்திற்கு வர மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பயப்படுகிறார். அவர் வந்து ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். அதில் என்ன பிரச்சினை? ஏதோ தவறு நடந்துள்ளது. எனவே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பதில் அளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/priyanka-gandhi-said-that-union-home-minister-amit-shah-is-afraid-to-attend-the-parliament-session




