போபால், மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பராஜ், நவ்ராஜ், கூக்ரா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். 12 பேர் பலி இதில் பலருக்கும் வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மத்தியபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/madhya-pradesh-illicit-liquor-death-toll-rises-to-12




