சென்னை, தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. இதனையடுத்து 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக்கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கட்சி நிதி வாங்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார். இந்த நிலையில், சட்டசபையில் இன்று போக்குவரத்து, பொதுத்துறை, நிதித்துறை, திட் டம் மற்றும் வளர்ச்சித்துறை, மாநில சட்டமன்றம், ஓய்வூதியங் களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பதிலுரை வழங்குவார்கள். இந்த விவாதம் மதியம் முடிவடைந்தவுடன் மற்ற அலுவல்கள் நடைபெறும். சட்டசபை மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-concludes-today




