மும்பை லால்பாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற காலாசவுக்கி கணபதி பந்தலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அலை மோதியது.அதிகாலை 2.20 மணியளவில், பந்தலின் நுழைவாயில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் மற்றும் குளிர்பான கடையின் அருகே சென்ற மின் ஒயரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தப்ப குதி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. 2 பேர் பரிதாப பலி இதனையடுத்து வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் அலறியடித் துக்கொண்டு ஓடினர். எனினும், மின்சாரம் தாக்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் மின் நிறுவன அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட 6 பேரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராகினி யாதவ்(வயது8) என்ற சிறுமியும், சுஜாதா(33) என்ற பெண்ணும் பரிதாப மாக உயிரிழந்தனர். சிறுமி கவலைக்கிடம் மேலும், காயமடைந்த கிரண் அக்பர் நாயக்(19), தன்வி நரேஷ் ஹண்டே(19), சாஹில் சந்தீப் தாரே (19) ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், ரூஹி சிங் (12) என்ற சிறுமி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காலாசவுக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/two-people-including-a-young-girl-died-of-electrocution-at-a-ganpati-pandal-in-mumbai-four-devotees-were-critically-injured




