புவனேஷ்வர், நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாட்ட நேற்று ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வான தேசியக்கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் உடற்கல்வி ஆசிரியர் பிரியபிரெடா பிஹிரா ஈடுபட்டார். அவருக்கு 3 மாணவர்கள் உதவி செய்தனர். இரும்பால் ஆன கொடிக்கம்பத்தை நட முயற்சித்தபோது கொடிக்கம்பம் மின்கம்பி மீது உரசியது. இதில், கொடிக்கம்பத்தை பிடித்திருந்த உடற்கல்வி ஆசிரியர் பிஹிரா மற்றும் 3 மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 4 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஆசிரியர் பிரியபிரெடா பிஹிரா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறித்தனர். எஞ்சிய 3 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/teacher-dies-electrocuted-while-erecting-flagpole-at-school




