பழனி, பழனி கோவில் வரலாற்றில் முதல் முறையாக இந்த பசலி ஆண்டில் உண்டியல்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.103 கோடியை தாண்டியுள்ளது. பழனி கோவில் உலக புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி மலைக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இந்த கூட்டத்தின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக காணப்படுகிறது. நேர்த்திக்கடன் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் சித்ரா பௌர்ணமி போன்ற முக்கியத் திருவிழா நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிகிறார்கள். இந்த நாட்களில் முருக பெருமானுக்குக் காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். காணிக்கை இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையாக கோவில் உண்டியலில் தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களையும், ரூபாய் நோட்டுகள், தானியங்கள், பரிவட்டங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றனர். தரிசன டிக்கெட் இது தவிர கோவில் சார்பில் தரிசன டிக்கெட், ரோப்கார் மின் இழுவை ரெயில், பஞ்சாமிர்தம் விற்பனை, பிரசாத விற்பனை. குத்தகை போன்றவை மூலமும் கோவிலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. ரூ.103 கோடி பழனி கோவில் வரலாற்றில் முதல் முறையாக இந்த பசலி ஆண்டில் உண்டியல்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.103 கோடியை தாண்டியுள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையுள்ள ஓராண்டு காலக்கட்டத்தை பசலி ஆண்டு அழைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 ஆண்டுகளில் கோவிலுக்கு கிடைத்த வருவாய் விபரம் வருமாறு:- 1430-ம் பசலி ஆண்டில் ரூ. 15 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 560ம் 1431ம் பசலி ஆண்டில் ரூ.41 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 755ம் 1432ம் பசலி ஆண்டில் ரூ.80 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரத்து 267ம், 1433ம் பசலி ஆண்டில் ரூ.86 கோடியே 06 லட்சத்து 06 ஆயிரத்து 774ம் 1434ம் பசலி ஆண்டில் ரூ.97 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 918 கிடைத்தது. பழனி கோவில் வரலாற்றிலேயே நடப்பு பசலி ஆண்டான 1435ம் ஆண்டு ரூ.103 கோடியை தாண்டி வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு கிடைத்த மொத்த வருவாய் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-sets-a-new-all-time-revenue-record-do-you-know-the-amount




