கவுகாத்தி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது ஒரு நாள் போட்டி இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. பந்துவீச்சு தேர்வு இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் ஜான் சேப்பல், கேப்டன் ஷாய் ஹோப், அமீர் ஜன்கோ ஆகிய 3 வீரர்களும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். ஜான் 101 ரன்களும், ஷாய் ஹோப் 104 ரன்களும், அமீர் ஜன்கோ 114 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கு இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்தார். அவர் 133 பந்துகளில் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அபார வெற்றி இந்த நிலையில் இந்திய அணி 43.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 406 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை சேஸ் செய்த 2-வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 435 ரன்கள் இலக்கை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/second-odi-india-chase-406-runs-stunning-win




