மதுரை, காவிரி தண்ணீருக்காக அல்ல, ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் திரிஷாவிற்காக சண்டை போடுகிறது என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உங்கள் நிலைப்பாடு என்ன என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விகளுக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்காமல் சிரித்துக் கொண்டே சென்று விடுகிறார். இது தான் த.வெ.க அமைச்சரிகளின் பலரது நிலையாக உள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மட்டுமே பெய்துள்ளது. மாநில முழுமைக்கான அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் குறைந்துள்ளது. ஓட்டு மொத்த அளவான 2 லட்சத்து 24 ஆயிரம் கன அடியில் தற்போது, வெறும் 70 ஆயிரத்து 439 கன அடி மட்டுமே உள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைது விஜய்க்கு கோபம் வராது, வந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் நேற்று தமிழ்நாடும், இந்தியாவும் பார்த்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அவரை சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை தேர்தல் பிரசார பவனி போல அழைத்துக்கொண்டு சென்றனர். இங்கு அணை நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது, அரிசி விலை உயர்ந்து வருகிறது, காவிரியில் தண்ணீர் கொடுக்கவில்லை, முதல்-அமைச்சர் வேகமாக நடவடிக்கை எடுப்பாரா என்பது தான் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதை விடுத்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காவிரி தண்ணீருக்காக சண்டை போடவில்லை, நடிகை திரிஷாவுக்காக சண்டை போடுகிறது என்பது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு, இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/not-for-cauvery-water-the-ruling-party-and-the-opposition-are-fighting-for-trisha-rp-udayakumar




