தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, "தேர்தல் களத்தில் திமுகவினர் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் எனக்கு ஒரு நோய் வந்திருந்தது. என்னால் பேச முடியாமல் இருந்தது. அன்றைக்கு அமைச்சராக இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் 'நீ, பேசு' என்றார். என்னால் பேச முடியவில்லை. அமைச்சர் வன்னி அரசு ஆனால் அந்த அவையில் அண்ணன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எனக்காக பேசினார். எனது வெற்றியைப் பாராட்டி பேசிய ஒரு தலைவர் என்றால் அது எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் தான். நாங்கள் தொடர்ந்து நன்றிகளைச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எதிர் தரப்பில் (திமுக) இருந்து பேசக்கூடியவர்கள் யாருமே எங்களுடைய எழுச்சி தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொன்னதாகத் தெரியவில்லை. "பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி நன்றி என்றால் இருவருக்கும் பொதுவானதுதான். இரண்டு பக்கமும் வாக்குகள் தான் இருக்கின்றன. உழைப்புகள் தான் இருக்கின்றன. ஆனால் இதுவரை அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லவில்லை என்று இந்த அவையில் பதிவு செய்கிறேன்" என்று பேசினார். வன்னி அரசின் இந்தப் பேச்சுக்கு எழுந்து பதில் சொன்ன எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தொல். திருமாவளவன் அண்ணனுக்கு நாங்கள் நன்றி சொல்லவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். udhayanidhi stalin ஆனால் நான் அவரிடம் சொல்லிக்கொள்வது எங்களுடைய தலைவருக்கும் அண்ணன் திருமாவளவனுக்கும் இருந்தது தேர்தல் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என மாறும் கூட்டணி கிடையாது. அது ஒரு கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று நான் பலமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறேன். திருமாவளவனுக்கு நாங்கள் என்றுமே நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்" என்று கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-stalin-answer-to-vanni-arasu-in-tn-assembly




