சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெம்மிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அவர் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது. சி.எஸ்.கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாகீர் கான் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். குறிப்பாக, பல இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பல ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்திருக்கிறார். ஒரு வீரராக 2000-களில் இந்திய அணியின் மாபெரும் வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர் ஜாகீர் கான். கிரிக்கெட் விளையாட்டை மிக நுட்பமாகப் புரிந்துவைத்திருக்கும் மிகச்சிறந்த மூளைக்காரர்களில் அவரும் ஒருவர். அவரை எங்கள் 'சிஎஸ்கே' குடும்பத்திற்குள் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார். Zaheer Khan தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஜாகீர் கான் பேசுகையில், "ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான ஒரு அணியில் அங்கம் வகிப்பதை மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு வீரராகக் களத்தில் நான் 'சிஎஸ்கே' அணியை எதிர்த்து விளையாடியிருக்கிறேன்; அந்தப் போட்டிகளை மிகவும் ரசித்து ஆடியிருக்கிறேன். குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் 'சூப்பர் பேன்ஸ்' உருவாக்கும் அந்தச் சூழ்நிலை மிகவும் தனித்துவமானது, சிறப்பு வாய்ந்தது. இவ்வளவு நீண்ட வரலாறும் பாரம்பர்யமும் கொண்ட ஒரு அணியில் இணையக் காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். CSK: 'Left Arm Taking Over!' - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://sports.vikatan.com/cricket/csk-zaheer-khan-kasi-viswanathan-statements-head-coach-appointment



