கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக உள்ளது இதனால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியாக குளித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை முதல் வழக்கம்போல் அருயில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த நிலையில் வால்பாறை சக்தி எஸ்டேட், தலைநார் எஸ்டேட், லில்லி முருகன் எஸ்டேட்,போன்ற பகுதிகளில் காலை முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது இதனால் சோலை காடுகள் வழியாக ஆழியார் கவியருவிக்கு வந்த தண்ணீர் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் வரத்து அதிகளவில் வந்ததை அடுத்து சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி அருவிக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர் மேலும் வனத்துறையினர் கூறுகையில் நீர்வரத்து குறைந்தவுடன் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதுவரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் அருவிக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டனர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-flash-flood-at-aliyar-kaviaruvi-tourists-evacuated




