புதுடெல்லி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து; இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தங்கப்பதக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் திருமுரு ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாராட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி குறித்து பெருமிதம் தெரிவித்தப் பிரதமர், அவர்களது துல்லியமான குழுப் பணியின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டு தெரிவித்தார். தங்கப்பதக்கம் வென்ற வில்வித்தை வீரர்களின் எதிர்கால முயற்சிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவு இறுதி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ் மற்றும் கணேஷ் மணிரத்னம் திருமுரு ஆகியோருக்கு வாழ்த்துகள். வாழ்த்துகள் அவர்களது துல்லியமான செயல்பாடுகள், குழுப் பணி ஆகியவை வெகு சிறப்பாக அமைந்திருந்தன. தங்கப்பதக்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/prime-minister-congratulates-indian-team-on-asian-archery-gold




