தேனி, தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் 80 வயதான முத்துமாயன். அவரது மகன் கணேசன் தேங்காய் வெட்டும் கூலி தொழில் செய்து வரும் நிலையில், மனநல பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணேசன் நேற்று நள்ளிரவு வீட்டிற்கு சென்றபோது, அவருக்கும், அவரது தந்தை முத்துமாயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் முத்துமாயன் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து இன்று காலை முத்துமாயனை பார்க்க அவரது பேரன் ஹரிஹரன் சென்றபோது, முதியவர் முத்துமாயன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடலூர் வடக்கு போலீசார், முத்துமாயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணேசனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரை அவரது மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-elderly-man-brutally-murdered-by-beheading-sons-savage-act




