சென்னை, சென்னை பாடி, டி.எம்.பி. நகர், அவ்வை தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 43). தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு. காருக்குள் அமர்ந்து பாடல் கேட்டபடி தூங்கியதாக தெரிகிறது. திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், காரின் பக்கவாட்டு கண்ணாடியை தட்டி மோகனை வெளியே வருமாறு கூறினர். உடனே மோகன், காரில் இருந்து வெளியே வந்தார். விசாரணை அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-car-parked-at-the-door-of-a-house-caught-fire-and-was-destroyed




