சென்னை, சென்னையில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், வீடுகளில் இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்திலும் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் மின் தேவை கடந்த ஆண்டை காட்டிலும் தினமும் 500 முதல் 1,000 மெகாவாட் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மின் தேவை தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை விளங்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 38.80 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு 253 துணை மின் நிலையங்கள், 40,798 டிரான்ஸ்பார்மர்கள், 55 ஆயிரம் கி.மீ. தாழ்வழுத்த மின் வழித்தடங்கள் மற்றும் 16,600 கி.மீ. உயரழுத்த மின் வழித்தடங்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையின் தினசரி சராசரி மின் தேவை 3,500 மெகாவாட்டாக உள்ளது. கோடை காலத்தில் மின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி இதுவரை இல்லாத அளவாக 5,014 மெகாவாட் உச்சத்தை எட்டியது. கோடை காலம் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வீடுகளில் பகல் நேரத்திலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னையின் தினசரி மின் தேவை சராசரியாக 4,200 முதல் 4,500 மெகாவாட் வரை உள்ளது. மின் தடை மின் தேவை அதிகரிப்பால் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் சாதனங்களில் அதிக சுமை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், எழும்பூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓவர்லோடு காரணமாக மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, அவ்வப்போது மின்தடை ஏற்படும் நிலையும் தொடர்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennais-power-demand-increases-by-1000-mw-due-to-heatwave




