திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மூன்று நாட்களாக நடைபெற்ற பவித்ரோற்சவம், மகா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. பவித்ரோற்சவம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 24-ம் தேதி பவித்ரோற்சவம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பவித்ர பிரதிஷ்டை, பவித்ர சமர்ப்பணம் ஆகிய நிகழ்வுகள் ஆகியவை ஆகம விதிகளின்படி நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான நேற்று மகா பூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப புரோக்க்ஷணம், நிவேதனம் ஆகிய நிகழ்வுகள் ஆகம முறைப்படி நத்தப்பட்டன. அதன்பின்னர் உற்சவர்கள் பத்மாவதி தாயார், கிருஷ்ண ஸ்வாமி, சுந்தரராஜ சுவாமி மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. சக்கரஸ்நானம் அதைத் தொடர்ந்து உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வார் பத்ம புஷ்கரிணிக்கு ஊர்வலமாக சென்றடைந்தார். அங்கு உற்சவரை மூன்று முறை திருக்குளத்தில் மூழ்கச் செய்து சக்கரஸ்நானம் நடைபெற்றது. மாலையில் உற்சவர்கள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, இணை நிர்வாக அதிகாரி சரத், தலைமை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்.பி. சுப்பராயுடு, துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/padmavathi-ammavari-pavitrotsavams-at-tiruchanoor-concluded-with-maha-poornahuthi




