மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று உண்மை. அதில் எந்த மாற் றமும் இல்லை. ஜல்லிக்கட்டு நான் பிறந்த மண்ணின் வீர விளையாட்டு. அதை நான் எப் படி இழிவுபடுத்துவேன். அலங்காநல்லூர் பகுதியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிதி இன்றி மூடப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்குவதற்கு ரூ.50 கோடி நிதி தேவைப்படும் நிலையில், யாருக்கும் பயனின்றி ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கத்துக்கு செலவிட்ட நிதியை பயன்படுத்தி சர்க்கரை ஆலையை திறக்க உதவி இருக்கலாம் என்ற கருத்தைதான் கூறினேன். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது. பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-was-not-disparaged-in-the-assembly-sholavandan-constituency-mla-clarifies




