மதுராந்தகம், மதுராந்தகத்தில் தி.மு.க ஜெயித்துவிட்டால் நான் எனது தேர்தல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக தயார் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி கூறுவார். ஆனால், இப்போது ஒருவர் உள்ளார். திமுகவை அழிக்க வந்தவர் உதயநிதி ஸ்டாலின். குடும்ப கட்சி 1967-ல் அறிஞர் அண்ணா மக்கள் ஆட்சியைக் கொண்டுவந்தார். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து, பிறகு மன்னர் ஆட்சியைக் கொண்டு வந்தார். பின்னர் வந்த மு.க. ஸ்டாலினுக்கு தன் மகனை பெரிய மன்னனாக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. திடீரென வந்த இளவரசர் நல்ல மன்னன் போருக்குச் சென்று மக்களை பாதுகாப்பார். இன்னும் சில மன்னர்கள் அந்தப்புரத்தில் மட்டுமே இருப்பார்கள். தேர்தல் என்றால் என்ன? அது ஒரு யுத்தம். அந்த யுத்தத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வரும். மன்னராட்சியை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் தலைவன் வந்துள்ளான். அதுதான் முதல்-அமைச்சர் விஜய். இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்குப் பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் கூறுங்கள். பதவியை ராஜினாமா செய்ய தயார் மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்துவிட்டால் தவெக பொதுச்செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். உதயநிதிக்கு நான் வெளிப்படையாக சவால் விடுகிறேன். இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு உங்கள் அப்பாவைக் கூட கூட்டிக்கொண்டு வா? திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியில் இருந்து விலக உதயநிதி தயாரா? நாங்கள் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 ஆண்டு பழமையான கட்சி ஆயிற்றே. மதுராந்தகத்தில் த.வெ.க.,வை விட தி.மு.க. ஒரு ஓட்டு அதிகமாக பெற்றுக் காட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ready-to-resign-from-the-post-adhav-arjunas-speech




