இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானின் 8 டிரோன்களை முறியடித்து அந்நாட்டின் மீது பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது சமீப ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து உள்ளன. இதனால், அவற்றை கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு சுமத்தியது. இதனை, ஆப்கானிஸ்தான் மறுத்தது. எனினும், ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. 28 பேர் பலி கடந்த பிப்ரவரி முதல் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த மோதலால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கிழக்கு ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில், 28 பேர் பலியாகி உள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்தது. எனினும், ஆப்கானிஸ்தானிய அதிகாரிகள் கூறும்போது 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்தது. 8 டிரோன்கள் இந்த நிலையில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் உள்ள 10 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் தரப்பு கூறும்போது, பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதை பாகிஸ்தான் ராணுவம் முறியடித்தது. பின்னர் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் 8 டிரோன்களை ஏவி, பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான் ஏவிய 8 டிரோன்களும் வடமேற்கு நகரான கோஹாட் மற்றும் எல்லை நகரான தோர்காமிற்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தி அழிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/8-drones-foiled-pakistan-airstrikes-on-afghanistan




