மும்பை, மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழையால், பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மராட்டியத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நான்டெட், ஹிங்கோலி மற்றும் பர்பானி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.6 முதல் 4.6 வரை பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் லேசான குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நில அதிர்வுகள் பஸ்மத் (வஸ்மத்), கலம்நூரி, அவுந்தா நாக்நாத், ஹிங்கோலி மற்றும் அதன் அண்டைப்பகுதிகளில் பரவலாக உணரப்பட்டன. இந்த லேசான நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/mild-earthquake-in-maharashtra-2




