பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 பேர் பலி இந்நிலையில், அம்மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்திலும் கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. கனமழையால் அம்மாவட்டத்தின் இந்திரா நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் குடிசையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் மல்லிகார்ஜுனா (வயது 35), அவரது மனைவி நாகவேணி (வயது 28) இந்த தம்பதியின் 3 வயது மகன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/karnataka-heavy-rain-landslide-3-killed




