திரைப்படத்துக்கு முன்பணத்தை வாங்கிய 40 லட்சம் ரூபாதை திரும்ப தராதது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரண், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். கிராமியக் கதைக்களம் கொண்ட படங்களில் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். சென்னை மீஞ்சூரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சரவணன் என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு திரைப்படத்துக்காக நடிகர் ராஜ்கிரணுக்கு 50 லட்சம் ரூபாய் முன்பணம் அளித்துள்ளார். பட தயாரிப்புப் பணிகள் துவங்காததால், பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி, ராஜ்கிரணிடம், சரவணன் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 10 லட்சம் ரூபாயை 2025 ஆம் ஆண்டு சரவணனுக்கு திருப்பிக் கொடுத்த நிலையில், 40 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, மீஞ்சூர் போலீசில் கடந்த 2025 செப்டம்பரில் சரவணன் புகார் அளித்தார். இதையடுத்து பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி ராஜ்கிரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரி ராஜ்கிரண் ஐகோர்ட்டில் மனு தாக்கல் இந்த நிலையில் ராஜ் கிரண் தரப்பில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், படத் தயாரிப்பு சம்பந்தமாக 2022ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் நான்கு ஆண்டுகள் கழித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையில் வழக்கான இந்த வழக்கில் குற்றவியல் சாயல் பூசப்படுகிறது, தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான நான் எங்கேயும் தப்பி விட மாட்டேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-rajkiran-files-petition-in-chennai-high-court-seeking-anticipatory-bail




