மனைவியின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற ஒரு கணவன் என்னவெல்லாம் செய்வான் என்கிற ஒன்லைனை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் ‘அன்பில் அவன்’. அசோக் செல்வனும், பிரீத்தி முகுந்தன் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பிரீத்தி முகுந்தனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறார், அசோக் செல்வன். இதற்காக மலைப்பகுதியில் உள்ள ஒரு அழகான வீட்டை அதன் உரிமையாளர் ரேவதியிடம் இருந்து வாங்குகிறார். அதன்பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக அசோக் செல்வனுக்கும், பிரீத்தி முகுந்தனுக்கும் வருகிறது. அந்த பிரச்சினைகளில் சிக்கும் இருவரும் மன உளைச்சல் அடைகிறார்கள். பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். இதற்கிடையில் நடக்கும் ஒரு கொலை, இருவரையுமே சிக்கலில் விட்டுவிடுகிறது. அதில் இருந்து அசோக் செல்வனும், பிரீத்தி முகுந்தனும் மீண்டார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன், இந்தமுறையில் ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாண நடிப்பை கொடுத்துள்ளார். அவரது எதார்த்தமான நடிப்பு கைகொடுத்திருக்கிறது. ஆக்ஷனிலும் வெளுத்து வாங்கியுள்ளார். பிரீத்தி முகுந்தன், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இருவரிடையே வரும் கெமிஸ்ட்ரி காட்சிகளும் கைகொடுத்துள்ளன. கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துல் சமத் உள்ளிட்டோர் அனைவருமே பொருத்தமான தேர்வு. ஓரிரு காட்சிகளே வந்தாலும் ரேவதி கவனம் ஈர்க்கிறார். கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தவின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பீல்குட் மூவியாக நகரும் கதை ஒரு கட்டத்தில் ஆக்ஷன் தளத்தில் பயணிக்க வியப்பு. நேர்த்தியான திரைக்கதை கைகொடுக்கிறது. சில இடங்களில் லாஜிக் மீறல் இருக்கிறது. காதலும், ஆக்ஷனும் கலந்த கலவையாக ரசிகர்களுக்கு புது விருந்து கொடுத்துள்ளார், இயக்குனர் ஆர்.கார்த்திகேயன். கடைசி 10 நிமிடங்கள் ஆக்ஷன் விருந்து எனலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/movie-review/anbil-avan-cinema-review



