நெல்லை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி தென் மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சார்லபள்ளி -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07535) வருகிற 25-ந்தேதி, அக்டோபர் 2, 9, 16, 23-ந்தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் இரவு 8.40 மணிக்கு நெல்லை வந்து, நாகர்கோவிலுக்கு 9.45 மணிக்கு சென்றடை கிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லபள்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண் 07536) வருகிற 27-ந்தேதி, அக்டோபர் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 12.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் நெல்லைக்கு அதிகாலை 2.05 மணிக்கு வந்து, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு சார்லபள்ளி சென்றடைகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nagercoil-and-charlapalli




