புதுடெல்லி எத்தனால் கலப்பு பெட்ரோல் திணிப்பை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என கெஜ்ரிவால் பேரணியில் பேசியுள்ளார். இ20 எனப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்யும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் வீடு நோக்கி ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் இணைந்து இன்று பேரணியாக சென்றனர். டிரம்ப் நெருக்கடி அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் நெருக்கடிக்கு பயந்து பிரதமர் மோடி செயல்பட கூடாது என்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவிடம் இருந்து எத்தனால் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில், எத்தனால் கலப்பு பெட்ரோல் திணிப்பை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடி எங்களை அழைத்து பேசுவார் என நம்புகிறேன். அவரை சந்திக்க வேண்டும் என்று நாங்கள் அவருக்கு ஒரு தகவலை அனுப்பி இருக்கிறோம். இந்த போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modi-should-stop-ethanol-blended-petrol-filling-kejriwal-speaks-at-rally




