சென்னை, கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியினை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கல்குவாரி சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் தமிழக பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் மதன். மலைப்பிரதேசங்களை இப்படி சட்டவிரோதமாக துண்டு துண்டாக வெட்டி எடுப்பது கடுமையான நிலச்சரிவிற்கு வழிவகுக்கும் என்பதை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959- ன் படி, தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் உள்ளிட்டவைகளுக்கு அருகில் இதுபோன்ற கல்குவாரிகள் அமைய கடும் கெடுபிடிகள் நிலவும் நிலையில், நாயுடுபுரத்தில் எதன் அடிப்படையில் இந்த கல்குவாரி இயங்கி வருகிறது? மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA-TN) உள்ளிட்ட அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களிடம் இருந்து குறிப்பிட்ட கல்குவாரி முறையாக அனுமதி வாங்கியதா? அரசு அதிகாரிகள் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நாயுடுபுரத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் இந்த கல்குவாரி குறித்து திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு அதிகாரிகள் எதுவும் கண்டுகொள்ளாதது ஏன்? அதிலும் தமிழக பாஜகவின் மேற்கு மாவட்டத் தலைவர் மதன் இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் கூட, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? குறிப்பிட்ட கல்குவாரிக்குப் பின்னணியில் ஏதேனும் மிகப்பெரிய அரசியல் புள்ளியின் தலையீடு இருக்கிறதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு ஆளும் அரசு தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்… — Nainar Nagenthran (@NainarBJP) September 13, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-stone-quarry-near-kodaikanal-why-are-government-officials-turning-a-blind-eye-nainar-nagendran-questions




