செங்கல்பட்டு, செங்கல்பட்டு பெரிய நத்தம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பெருந்தேவி(61). இவர் தனது மகன் வெங்க டேசன்(34), மருமகள் இந்துஜா (28) மற்றும் பேரன், பேத்திகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்தேவி, தனது வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்துவிட்டதாகக்கூறப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று பெருந்தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இறப்பினை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து பெருந் தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெருந்தேவியின் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சந்தேகமடைந்த போலீ சார்,அவரது மருமகள் இந்துஜாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாமியார் -மருமகள் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும், திடீரென எதிர்பாராத விதமாக குளியலறையில் வழுக்கி விழுந்த மாமியார் சுயநினைவு இழந்ததை பயன்படுத்திக் கொண்டு அவரை கழுத்தை நெரித்து ஆத்திரம் தீர அடித்ததாகவும் இந்துஜா தெரிவித்துள்ளார். குடும்பப் பிரச்சினைகாரணமாக மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த இந்துஜா ஒப்புக்கொண்டதின் அதனடிப்படையில் இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நகர போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர். பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து சுயதினை இழந்து உயிருக்கு போராடிய தனது சொந்த மாமியாரை கொஞ்சம் கூட ஈவிரமின்றி கழுத்தை நெறி கொலை செய்த சம்ப உறவினர்கள் மற்றும் அப்பகுதிமக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-in-law-slips-and-falls-in-the-bathroom




