சென்னை, இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், முதல் காட்சியை பார்க்க ஜேசன் சஞ்சயின் தாயாரும் முதல் அமைச்சர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா வருகை தந்துள்ளார். வடபழனியில் உள்ள திரையரங்கில் சங்கீதா, சிக்மா படத்தை பார்த்து வருகிறார். இன்று ரிலீசாகும் சிக்மா நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. விஜய்யின் மகன் என்பதால் முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சங்கீதா வருகை இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், முதல் காட்சியை பார்க்க ஜேசன் சஞ்சயின் தாயாரும் முதல் அமைச்சர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா வருகை தந்துள்ளார். வடபழனியில் உள்ள திரையரங்கில் சங்கீதா, சிக்மா படத்தை பார்த்து வருகிறார். ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை அவரது தந்தையும் முதல் அமைச்சருமான விஜய் பார்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ஜேசன் சஞ்சய் பேட்டி முன்னதாக பேட்டி ஒன்றில் தனது தந்தை படம் பார்த்துவிட்டு உங்களுக்கு போன் செய்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் என்ன நினைப்பீர்கள்? என்று ஜேசன் சஞ்சயிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், பொதுவாகவே அப்பா ரொம்ப அமைதியான மனிதர். ஒரு கேள்வி கேட்டால் யோசித்து பதில் சொல்லவே 10 வினாடிகள் எடுத்துக்கொள்வார். ஒரு நிமிடம் வரை அவர் அமைதியாகவே இருந்தால், அப்பா போனை கட் பண்ணிட்டீங்களா என்று கேட்டுட்டு போனை வச்சிடுவேன். ஒரு படத்தை ஆராய்ந்து கருத்து சொல்ல சிறிது நேரம் தேவைப்படும். தனது முதல் படத்தைப் பார்த்து அவர் கண்டிப்பாக பெருமைப்படுவார் என்றும் கூறியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sangeetha-arrives-to-watch-son-jason-sanjays-film-sigma




