ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின் 484-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் ஆரோன் திருப்பலியை நிறைவேற்றினார். திருவிழா கொடியேற்றம் இதனை தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடந்து வந்த இந்த நவநாள் திருவிழாவில் நாள் தோறும் மாலை வேளைகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள் பங்கேற்று திருப்பலியினை நடத்தினர். இதில் புனித தெரசாள் பங்கு, ஓலைக்குடா, மதுரை கொம்படி, பரமக்குடி குனப்பனேந்தல், காரங்காடு, புதுப்பட்டினம், பாம்பன், மண்டபம், முத்துப்பேட்டை, அக்காள்மடம், வேர்க்கோடு, ராமேஸ்வரம், அரியாண்குண்டு, தண்ணீர் ஊற்று உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இறைமக்கள் பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் புனித சந்தியாகப்பர் தேர்பவனி நேற்று இரவு நடந்தது. மறைவட்ட அதிபரும் ராமநாதபுரம் பங்கு தந்தையுமான சிங்கராயர் திருவிழா திருப்பலியினை நடத்தினார். இதனை தொடர்ந்து புனித சந்தியாகப்பரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுடன், தீவு பகுதியில் உள்ள மும் மதங்களை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். திருவிழாவில் கூடிய பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய நடந்த திருவிழாவின் திருப்பலியினை இன்று அதிகாலை சிவகங்கை அவியான்னி அருள்பணி மைய இயக்குநர் செபாஸ்டின் நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து இன்று மாலை திருவிழா நிறைவுத் திருப்பலியுடன் கொடியிறக்கமும் நடக்க உள்ளது. நவநாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் ஆரோக்கியராஜா, செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் விமல்ராஜ் மற்றும் பங்கின் இறைமக்கள், தீவு பூர்வீக கிருஸ்துவ அமைப்பினர் செய்திருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/spiritual/the-islands-grand-festival-attended-by-devotees-of-three-religions-the-festival-of-the-holy-sandhyagabar-temple-took-place-at-dawn




