கொழும்பு இலங்கைக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 இந்திய வீரர்களை பற்றி காண்போம். இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில், 2 அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 15-ந்தேதி காலேயிலும், 2-வது டெஸ்ட் போட்டி 23-ந்தேதி கொழும்புவிலும் நடைபெற உள்ளன. டாப் 5 வீரர்கள் இதற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தயாராக உள்ளது. அதற்கேற்ப பந்து வீச்சும் திறமையாக உள்ளது. இதனால் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்ற இந்தியா முனைப்புடன் உள்ளது. ரசிகர்களும் அதனை காண ஆவலாக உள்ளனர். அதற்கு முன், இலங்கைக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 இந்திய வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம். அனில் கும்பிளே (74) இதில், முதல் இடத்தில் இருப்பவர் அனில் கும்பிளே. முன்னாள் கேப்டனான இவர், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக 74 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். அவர் மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 619 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் (62) 2-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். அவர், இலங்கைக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21.93 சராசரி மற்றும் 43 ஸ்டிரைக் ரேட்டுடன் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனுடன், அவர் இலங்கைக்கு எதிராக மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளையும், ஒரு முறை பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஹர்பஜன் சிங் (53) முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இலங்கைக்கு எதிராக 39 சராசரி மற்றும் 75 ஸ்டிரைக் ரேட்டுடன் 53 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார். அவர் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் இரண்டு முறை பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கபில் தேவ் (45) ஒரு நாள் உலகக்கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1982 மற்றும் 1994 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இஷாந்த் சர்மா (36) இலங்கைக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 36 விக்கெட்டுகளுடன் இஷாந்த் சர்மா, 5-ம் இடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, சர்மா ஒரு முறை மட்டும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/india-top-5-test-wicket-takers-against-sri-lanka




