பச்சரிசியை ஊறவைத்து தேங்காயுடன் அரைத்து, பாலில் வேக வைத்து பாயசம் செய்தால் சுவை அசத்தலாக இருக்கும். அடை மாவில் பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தால், சுவை அதிகரிப்பதுடன் வாயுத் தொல்லையும் குறையும். அவியல் தயாரான பிறகு இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்தால் மணமும் சுவையும் கூடும். எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது, ஒரு பெரிய துண்டு இஞ்சியை நறுக்கி சேர்த்தால் ஊறுகாய் கூடுதல் மணத்துடனும் சுவையுடனும் இருக்கும். கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது, ஒரு ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் கருப்பாகாமல், நிறமும் சுவையும் நன்றாக இருக்கும். நெய் காய்ச்சி இறக்கும் நேரத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால், நீண்ட நாட்கள் மணம் மாறாமல் இருக்கும். பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது, உப்பை இறுதியில் சேர்த்தால் விரைவாக வெந்து சுவையாக இருக்கும். வடை மாவில் சிறிதளவு சாதம் சேர்த்து பிசைந்து வடை சுட்டால், எண்ணெய் அதிகம் குடிக்காது. வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம். வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/kitchen-hacks-to-boost-taste-and-aroma




