சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து த.வெ.க. அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. குறுவை சாகுபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டனர். ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு உடல் உழைப்போடு சுமார் ரூ. 25,000/- விவசாயிகளுக்கு செலவாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் செய்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர். இழப்பீடு த.வெ.க. கூட்டணி அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் அனுப்பி, நெற்பயிர்கள் கருகி பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,000 -த்தை நஷ்ட ஈடாக வழங்குவதுடன், மீதமுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணிநேரமும் விலையில்லா மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும் என்றும் பொய்க்கால் குதிரை த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/compensation-of-rs-25000-per-acre-should-be-provided-for-scorched-paddy-crops-edappadi-palaniswami-insists




