டெல்லியில் கடந்த வாரம் தான் தனது நண்பர்களுடன் சென்ற மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு திறந்த வெளியில் வீசப்பட்டார். அதற்குள் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து இருக்கிறது. தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி கோயிலுக்கு நேற்று இரவு 7 மணியளவில் 17 வயது மைனர் சிறுமி தனது 17 வயது ஆண் நண்பருடன் சென்றார். கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு, இருவரும் இரவு 7:30 மணியளவில் கோவிலுக்கு அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்றனர். அங்கு மூன்று பேர், சுமார் 25 முதல் 30 வயதுடையவர்கள், அவர்களை அணுகி தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறினர். அவர்கள் மூன்று பேரும் மைனர் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மூன்று பேரில் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பூங்கா அதன்பிறகு, மேலும் இரண்டு பேரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இருவர் பிடித்துக்கொள்ள ஒருவர் பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மூன்று பேரும் அப் பெண்ணையும் அவரது நண்பரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க உடனே தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பூங்காவில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு தனிப்படை இக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை அமர் காலனி பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அந்த நபரை கைது செய்ய முயன்றபோது அந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர் போலீஸார் மீது மூன்று முறை சுட்டார். இதையடுத்து, போலீஸார் அவரது வலது காலில் சுட்டு அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஆசிஃப் எனவும், ஓக்லா மண்டியில் பணிபுரிபவர் என்றும் தெரிய வந்தது. மூன்று பேருக்கும் எதிராக போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 10 நாளில் 4 சிறுமிகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை டெல்லியில் கடந்த 10 நாட்களில் 4 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகரில், மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேரால் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து 16ம் தேதி வடக்கு டெல்லியின் சதார் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில், 6-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி ஒருவரின் கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி மத்திய டெல்லியின் கிஷன் கஞ்ச் பகுதியில் 34 வயது நபர் ஒருவரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது கல்காஜி பூங்காவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/three-men-gang-rape-minor-girl-who-went-to-a-temple-with-a-male-friend-after-posing-as-police




