வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். டெக்சாஸ் - வாஷிங்டன் மோதல் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெக்சாஸ் 20 ஓவர்கள் முடிவிலனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் சேர்த்தது. அணியின் கேப்டன் டூபிளசிஸ் அதிகபட்சமாக 61 ரன்கள் சேர்த்தார். வாஷிங்டன் வெற்றி இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் 19.4 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெக்சாசை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாஷிங்டன் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-washington-freedom-beats-texas-super-kings




