நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன சூண்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிராம். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 42). இவர் அதே பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டு. உள்ளே பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்தார். பையில் வைத்திருந்த 14 பவுன் நகை, ரூ.300 பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புவனேஸ்வரி நியூஹோப் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன், கூடலூர் இன்ஸ்பெக்டர் பவுலோஸ். சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகிய தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/girlfriend-needs-money-youth-arrested-for-stealing-and-pawning-jewelry




