சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சீமான், ஷாந்தனு நடிப்பில் உருவான ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார். பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’எனப் பெயரிடப்பட்டு, அதன் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். திரைப்படத்தின் மோஷன் வீடியோ வெளியீடு தயாரிப்பு நிறுவனமான கேஆர்ஜி குரூப்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது. “ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம். இதுவே ஒரு கைதியின் டைரி” என்ற அழுத்தமான வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது. சுசீந்திரன் - சாந்தனு-சீமான் கூட்டணி ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ போன்ற யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான கதைகளை இயக்கி தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜும், மிக முக்கிய ஆளுமையான சீமானும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆர்வம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக் கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அப்பா – மகன் உறவை மையமாக் கொண்ட கதை மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. படத்தின் தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், சீமான் இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். கண்ணன் ரவி தயாரிக்கும் 10வது திரைப்படம் இது.கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “டிஎன் 2026” படங்களை தயாரித்துள்ளார். A Super Star-Studded Moment! ✨ Team is forever grateful to the epitome of Kollywood, Thalaivar, for unveiling the motion poster of. An honour beyond words! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rajinikanth-releases-motion-poster-of-suseenthirans-oru-kaidhiyin-diary




