திருவனந்தபுரம் சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறினார். சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் கூறும்போது, சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்னதாக ரூ.551 கோடியில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும். அரவணை பிரசாதம் பம்பை ஆற்றில் தேங்கி கிடக்கும் துணிகள் உள்பட அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 பஸ்கள் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும். சபரிமலையில் அரவணை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அவர் கூறினார். தீப்பாதுகாப்பு, மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும். பக்தர்களுக்கு தேவையான அரவணை உற்பத்தியை தினசரி 3.25 லட்சம் என்ற அளவில் உயர்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பயோ-கழிவறைகள் சீசனுக்காக இந்திய ரெயில்வே சார்பில் 300 ரெயில்களும் இயக்கப்படும். 600 புதிய பயோ-கழிவறைகளும் அமைக்கப்படும். 5 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதொடர்பாக மீண்டும் வருகிற அக்டோபரில் மறுஆய்வு செய்யப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/cm-says-70-lakh-tin-aravana-stock-to-be-kept-in-sabarimala



