காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை.29) கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று சிறிதளவு நீரைத் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மேகதாது அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன். '151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இழந்தது ஏன்?'- TVK அரசுக்கு ஸ்டாலின் கேள்வி இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழகத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர். முதல்வர் விஜய் அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/vijay-phone-call-dk-shivakumar-cauvery-water-issue




