நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் யார் இந்த பிரகலாத் ஜோஷி? பிரகலாத் ஜோஷி 1962-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுராவில் பிறந்தவர். ஸ்ரீ காதாசித்தேஸ்வரா கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், இளமைப் பருவத்திலேயே ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துடன் (RSS) இணைந்தார். பின்னர் பாஜக-வின் தீவிர அரசியல் களத்திற்குள் நுழைந்தார். கர்நாடக மாநில அரசியலில் வலுவான தலைவர்களில் ஒருவராகத் திகழும் இவர், தார்வாடு மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகப் பணியாற்றி, மாநிலத்தில் கட்சியைக் கட்டியெழுப்பியதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மோடி தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது, நிர்வாகத்தில் இருக்கும் நீண்ட அனுபவம் மற்றும் திறமையான கையாளுதல் திறனைக் கருத்தில் கொண்டு, இவருக்குக் கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/who-is-new-education-minister-prahald-joshi




