சேலம், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு சேலம் வீரர்கள் 906 பேர் தேர்வு பெற்று உள்ளனர். விளையாட்டு போட்டிகள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் கடந்த 9-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர் கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனியே போட்டிகள் நடை பெற்றன. இதில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் மாநில போட்டிக்கு சேலம் மாவட்டத்தில் 906 பேர் தேர்வாகி உள்ளனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணிதேவி கூறியதாவது:- பள்ளி மாணவ-மாணவிகள் பிரிவில் மாநில அளவிலான போட்டிக்கு 155 மாணவர்கள், 155 மாணவிகள் என மொத்தம் 310 பேர் தேர்வு பெற்று உள்ளனர். பரிசுத்தொகை கல்லூரி அளவில் 153 மாணவர்கள், 153 மாணவிகள் என 306 பேர், அரசு ஊழியர்கள் பிரிவில் 72 பேர், பொதுமக்கள் பிரிவில் 148 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 தேர்வு பெற்று உள்ளனர். அதன்படி முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட சேலம் மாவட்ட அளவில் மொத்தம் 906 பேர் தேர்வு பெற்று உள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 2,718 பேருக்கு விரைவில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1,000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-trophy-906-salem-athletes-selected-for-the-state-level-competition




