சென்னை, காவிரி விகாரத்தில் தவெக அரசு மவுனம் காக்காதீர் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை தமிழ்நாடு - கர்நாடகா இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் கர்நடகா அரசு காவிரி படுக்கையில் 5-வது அணையாக மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகளில் பாலைவனமாகி விடும் என்றும், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்அடும் என்றும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், காவிரி விகாரத்தில் மவுனம் காக்காதீர் என திமுக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம். மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும். என அதில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-remain-silent-on-the-cauvery-issue-kanimozhi-mp




