கடல் பயணத்தின் போது ஒரு பெரிய நீலத் திமிங்கலம் கப்பல் மீது மோதினால் என்ன ஆகும்? இந்தக் கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கும். உண்மையில், இப்படி ஒரு சம்பவம் நடந்தால் கப்பல் கவிழுமா அல்லது திமிங்கலத்திற்குத்தான் ஆபத்தா என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். முழுவளர்ச்சியடைந்த நீலத் திமிங்கலம் சுமார் 150 முதல் 180 டன் எடை கொண்டது. அதாவது, மூன்று பெரிய பேருந்துகளின் எடையைச் சேர்த்தால் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அந்த அளவுக்கு பிரம்மாண்டமான கடல்வாழ் உயிரினம் இது. இன்றைய பெரிய சரக்குக் கப்பல்கள் மற்றும் சொகுசுக் கப்பல்கள் பல ஆயிரம் டன் எடை கொண்டவை. எனவே, ஒரு நீலத் திமிங்கலம் கப்பல் மீது மோதுவதால் மட்டும் பெரிய கப்பல் பொதுவாகக் கவிழ்ந்துவிடாது. ஆனால், கப்பலின் முன்பகுதி அல்லது பிற முக்கியப் பகுதிகளில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாறாக, கப்பலின் முன்பகுதி அல்லது விசிறி இறக்கைகளில் அடிபட்டு திமிங்கலங்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் கப்பல்களால் மோதுண்டு பாதிக்கப்படும் இந்தச் சம்பவங்கள் ஆங்கிலத்தில் ‘ஷிப் ஸ்டிரைக்’ எனப்படுகின்றன. ஆனால், இதேபோன்ற மோதல் சிறிய பாய்மரப் படகுகள் அல்லது மீன்பிடிப் படகுகளில் நடந்தால் ஆபத்து அதிகம். பெரிய திமிங்கலம் படகின் மீது நேரடியாக மோதினால் படகு சேதமடையலாம். சில சூழ்நிலைகளில் படகு கவிழ்ந்து, அதில் பயணம் செய்பவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். திமிங்கலங்கள் கடல் மேற்பரப்புக்கு வந்து துள்ளிக் குதிக்கும் இயல்பைக் கொண்டவை. இதனை ‘ப்ரீச்சிங்’ என்கிறார்கள். இவ்வாறு துள்ளும்போது எதிர்பாராத விதமாக சிறிய படகுகள் மீது விழுந்தால், படகு சேதமடையவோ கவிழவோ வாய்ப்புள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஓர்கா எனப்படும் கொலையாளித் திமிங்கலங்கள் சிறிய பாய்மரப் படகுகளுடன் மோதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில சம்பவங்களில் படகுகளின் சுக்கான் பகுதிகள் சேதமடைந்துள்ளன. இருப்பினும், இவை அனைத்து திமிங்கலங்களும் வேண்டுமென்றே படகுகளைத் தாக்குகின்றன என்பதைக் குறிக்காது. கடல் பரந்து விரிந்தது. திமிங்கலங்கள் ஒலி அலைகளைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்தை உணர்கின்றன. ஓர்காக்கள் எதிரொலி ஒலியுணர்வைப் பயன்படுத்துகின்றன. பெரிய கப்பல்கள் திமிங்கலங்கள் உள்ள பகுதிகளில் வேகத்தைக் குறைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மோதல் அபாயத்தைக் குறைக்க முடியும். பொட்டாசியம் நிறைந்த கொய்யா. ரத்த அழுத்தத்திற்கு உதவுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/will-a-ship-capsize-if-a-whale-hits-it-in-the-open-sea




