ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்புவில் உள்ள ஒரு தனியார் மண்டபத் தில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- ஈழத் தமிழர் சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியா கோர்ட்டு மரண தண்டனை அறிவித்தது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அவரை மீட்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழக அரசு காலதாமதம் இன்றி அமல்படுத்த வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது குறித்து கூறியது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/steps-must-be-taken-to-light-a-lamp-atop-the-thiruparankundram-hill-hindu-munnani-state-president-speaks-to-the-press




