சேலம் மாவட்டம், ஓமலூரில் சேலம் மாவட்ட விசிகவினர் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானத்தின் படி, வருகின்ற இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் போட்டியிட வேண்டும். இதில் வெற்றி பெற்று, அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசிகவினர் கூறுகையில், ” விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், விசிக சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும். அதில் வெற்றி பெற்று ஆளும் தவெக ஆட்சியில், அமைச்சரவையில் அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும். இது தான் எளிய மக்களின் விருப்பம். அதைத்தான் நாங்கள் இப்போது தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்” என்று தெரிவித்தனர். இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தாலும் விசிக மாவட்ட நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானம் தமிழக அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வென்ற விசிக, தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் கை கோர்த்தது. தவெக அமைச்சரவையிலும் விசிக இடம் பெற்ற நிலையில், வன்னி அரசு அமைச்சராக உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-should-become-deputy-chief-minister-vck-functionaries-pass-resolution




